/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/24_44.jpg)
மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.
மேலும், இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 'ஏகே 62' எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், 'துணிவு' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொள்ள உள்ளதாகவும், இது தொடர்பாக அஜித்திடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இப்போது இந்த தகவல் பொய் என அஜித் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, "ஒரு நல்ல படம் அதுவே விளம்பரப்படுத்திக் கொள்ளும்" என அஜித் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடைசியாக 2010ஆம் ஆண்டு அசல் பட ஆடியோ விழாவில் அஜித் கலந்து கொண்டார். அதன் பிறகு எந்த பொது நிகழ்ச்சியிலும், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் அஜித் கலந்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)